ஜூலை 26,2008,00:00 IST நாசரேத்:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய வீடு வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய வீடு வளாகத்தில் தென்திருப்பேரை வட்டார அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அய்யம்பெருமாள் மேற்பார்வையில், மூக்குப்பீறி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரஸ்வதி தலைமையில் 26 டாக்டர்கள் கலந்து கொண்ட வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் பலருக்கு லேப், கண், ஸ்கேன், ஈ.சி.ஜி., கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறிவதற்கான சோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. 5 பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது.முகாமில் நாலுமாவடி பஞ்., தலைவர் இந்திரா முருகேசபாண்டியன் தலைமையில் மாவட்ட கவுன்சிலர் வித்யாசாகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் காதர்ஷா, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அலுவலக மேலாளர் செல்வக்குமார், பி.ஆர்.ஓ. டைட்டஸ், டாக்டர்.கமலி ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் திருச்செந்தூர் தொகுதி முன்னாள் எம்.பி.ஜெயசீலன் துவக்கி வைத்தார் முன்னதாக டாக்டர்.அன்புராஜன் வரவேற்றார் .முகாமினை சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் உமா வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் அய்யம்பெருமாள், டாக்டர் சரஸ்வதி, ஆகியோர் பார்வையிட்டனர். இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், மருந்தாளுநர் ஆண்ட்ரூஸ்,செவிலியர்கள் சந்திரா, வெயிலுகந்தாள், ஆனந்தி, சகாயராணி ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் பலர் கலந்து கொண்டனர்.