|
குட் சமாரிட்டன் கிளப்
((பதிவு செய்யப்பட்ட பொது நல அறக்கட்டளை)
இயேசு விடுவிக்கிறார் - நாலுமாவடி
குட் சமாரிட்டன் கிளப்-ற்கு உங்களை வரவேற்கிறோம்!
குட் சமாரிட்டன் கிளப்
அறிமுகம்
உங்கள் நகரில் உள்ள குட் சமாரிட்டன் கிளப்-போடு உங்களை இணைத்துக்
கொள்ளுங்கள். தாங்கள் வாழூம் பகுதியில் உள்ள மக்கள் எல்லா
நிலையிலும் முன்னேற்றமடைந்து, உலகின் தனிச்சிறப்புடன் வாழ்ந்திட,
நீங்களும் இக்கிளப்பில் சோ்ந்திட அன்புடன் அழைக்கிறோம். இன்றே
செயல்படுவீர்.
வாழ்க்கையின் எந்தப்பகுதியில் தங்களுக்குத் தனித்திறன் அல்லது
தன்னார்வம் உண்டோ, நல்ல விளைவுகளை சமுதாயத்திற்கு அளிக்குமோ,
அப்பகுதிகளில் தங்களது நேரத்தையும், தாலந்துகளையும், மனமுவந்து
பயன்படுத்திடுவீர்.
இச்சங்கத்தின் மனித நல மேம்பாட்டு முயற்சிகளுக்கு, தங்களது ஈரம்
கலந்த ஈகைக்கரங்களை நீட்டுமாறு நெஞ்சார வேண்டுகிறோம்.
“நன்மை செய்யும்படி உனக்குத் திராணி
இருக்கும் போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.”
(நீதி. 3.27)
“குட் சமாரிட்டன் கிளப்” என்பது ஒர் பொது நல அறக்கட்டளையாகும்.
இவ்வறக்கட்டளையின் குறிக்கோள்களாவன:
1. அன்புப் பரிமாற்றத்தால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு,
ஒற்றுமையுடன் வாழும் பண்ணினை மக்களிடையே உருவாக்கி வளர்த்திடல்,
2. ஒவ்வொருவரிடையே நல்ல குடிமகனுக்குரிய இயல்புகள் வளரும் வண்ணம்
ஊக்கம் அளித்தல்.
3. மானிட சமுதாயமானது, சமூக, பண்பாட்டு வாழ்வு ஒழுங்கு நெறிகளில்
வளம் பெற்று வளர்ந்திட ஆக்கமும் ஊக்கமும் அளித்திடல்.
4. இந்தியாவின் பல்வேறு பகுதி மக்கள், அப்பகுதிகளிலேயே கூடி, நட்பு,
ஐக்கியம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளல் போன்ற இணைப்புக்
கயிறுகளால் பிணைக்கப்பட்டு, ஒருவரது இன்ப துன்பங்களை உள்ளாரப்
பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் வண்ணம் சங்கத்தின் மண்டலம் மற்றும்
துணைமண்டலம் மையங்களை ஏற்படுத்துதல்.
5. தெய்வீக அன்பு, முடிவில்லா கரிசனை, நித்திய சமாதானம், பொறுமை,
பேரின்பம், ஒருமைப்பாடு போன்ற நற்குணங்களை வெளிக் கொணர்ந்து,
கனிவுள்ள வாழ்வு வாழ வழிவகை செய்தல்.
6. தொண்டுள்ளம் கொண்ட பெரியோர், பிரதிபலன் கருதாது செயல்பட
ஊக்குவித்தல், தனித் திறனுக்கும் சிறப்பிடம் அளித்து, வணிகம்,
உற்பத்தித் தொழில், அலுவல், பொதுப்பணி, தனியார் நிறுவனப்பணி,
சமுதாயப்பணி ஆகிய துறைகளில் சாலச் சிறந்த உயர் தரங்களை ஏற்படுத்தல்,
7. குழுவிளையாட்டு மற்றும் தடகள ஆட்டங்களையும், அவை சார்ந்த
திறன்களையும் வளர்க்கும் வண்ணம், குழுப்போட்டிகள் நடத்தி வெற்றிப்
பதக்கங்களும், சின்னங்களும் வழங்கிடல் போன்றவை.
இவ்வறக்கட்டளை ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால்
நிர்வகிக்கப்படுகிறது. அக்குழுத்தலைவராக சகோ. மோகன் சி லாசரஸ்
அவர்கள் செயல்படுகிறார்கள். சங்க செயல்பாட்டுக்குரிய கொள்கை மற்றும்
செயல்முறைகளை இக்குழுவே நிர்ணயிக்கும்.
இந்த நற்தொண்டின் செயல்களில் தங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட
அழைக்கப்படுகிறீர்கள்.
மேலும் விபரங்களுக்கு, கீழ்க்குறிப்பிட்டிருக்கும் முகவரியுடன்
தொடர்பு கொள்ளவும்.
தலைமை அலுவலகம்
JESUS REDEEMS, NALUMAVADI - 628 211, TUTICORIN DIST |